அரசியல் இலங்கை செய்தி

இலங்கை நோக்கி சர்வதேச பிரதிநிதிகள் படையெடுப்பு: முக்கிய புள்ளிகளை களமிறக்கும் டில்லி, பீஜிங்!

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியல் குழு தலைவர் ஜாவோ லெஜி நாளை மறுதினம் (23) இலங்கை வருகின்றார்.

சீனாவில் அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அடுத்தப்படியாக அரசாங்கத்தின் மூன்றாவது முக்கிய நபராக இவர் கருதப்படுகின்றார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (23) கொழும்புவரும் நிலையிலேயே இவரது விஜயமும் இடம்பெறுகின்றது.

ஜாவோ லெஜியின் கொழும்பு பயணம் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே வெளியாக இருந்தன.

இவ்விஜயத்தின்போது அவர் இலங்கை மீண்டெழுவதற்குரிய உதவித்திட்டங்களையும் அறிவிக்க இருந்தார். இந்நிலையிலேயே தமது வெளிவிவகார அமைச்சரை அவசரமாக கொழும்பு அனுப்புகின்றது டில்லி.

இலங்கை மீண்டெழுவதற்குரிய பாரிய உதவித்திட்டங்கள் அடங்கிய பிரதமர் மோடியின் செய்தியுடனேயே அவர் கொழும்பு வருகின்றார்.

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் கடந்த 16 ஆம் திகதி இலங்கை வந்திருந்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் அவர் பேச்சுகளை நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மற்றுமொரு சீன பிரமுகரை கொழும்புக்கு அனுப்புகின்றது பீஜிங்.

ஜாவோ லெஜியுடன் உயர்மட்ட சீனக்குழுவொன்றும் கொழும்பு வருகின்றது எனவும், அவர்கள் செவ்வாயன்று (23) ஜனாதிபதி அநுரவை சந்திக்கவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

அதேவேளை, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதியொருவரும் இலங்கை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கடந்த வாரங்களில் இலங்கை வந்து சென்றனர்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!