இலங்கை செய்தி

ஜம் இய்யதுல் உலமா – முஸ்லிம் மீடியா போரம் சந்திப்பு!!

Meeting between ACJU representatives and Muslim Media Forum members

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவுக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு (18) வியாழக்கிழமை மாலை உலமா சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தலைமையிலான நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, 100 வருட வரலாற்றைக் கொண்ட உலமா சபை முன்னெடுத்து வரும் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் சமூக வலுவூட்டலில் ஊடகவியலாளர்களின் வகிபாகம் குறித்தும் விரிவான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் அனர்த்த நிவாரணப் பணிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பில் அதன் தலைவர் எம்.பி.எம். பைறூஸ், ஸ்தாபக போஷகர் என்.எம்.அமீன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

உலமா சபையின் கடந்த 3 வருட செயற்பாடுகள் அடங்கிய அறிக்கையும் இதன்போது முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!