புயலுக்கு மத்தியிலும் இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!
இலங்கை சுற்றுலாத்துறை இந்த ஆண்டில் வலுவான செயல்திறனை பதிவு செய்துள்ளது. டிசம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் 93,031 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) குறிப்பிட்டுள்ளது.
இது நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2,196,624 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கு அடுத்தப்படியாக ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் சீனாவிலிருந்து குறிப்பிடத்தக்க சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் சுற்றுலா வருவாய் 89 பில்லியனை ($24 பில்லியன்) எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2.1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதால் இலங்கையின் சுற்றுலாத் துறை அதன் நிலையான மீட்சியைத் தொடரவும் மேலும் விரிவடையும் பாதையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





