கிரீன் கார்ட் லொட்டரி (green card lottery) திட்டத்தை இடைநிறுத்திய ட்ரம்ப்!
கிரீன் கார்ட் லொட்டரி (green card lottery) திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தி வைப்பதாக நேற்று அறிவித்துள்ளார்.
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem), ட்ரம்பின் உத்தரவின் பேரில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளுக்கு திட்டத்தை இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இவ்வாறான கொடூரமானவர்கள் நாட்டிற்குள் நுழைவதை அனுமதிக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பன்முகத்தன்மை விசா திட்டம், அமெரிக்காவில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு, குறிப்பாக ஆப்பிரிக்காவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டில் (2025) 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





