ஐரோப்பா செய்தி

நிதி மறுபகிர்வு – கவுன்சில் வரி உயர்வை எதிர்கொள்ளும் லண்டன் மக்கள்!

பிரித்தானிய அரசாங்கம் நிதியை மறுப்பகிர்வு செய்ய முயற்சிக்கும்போது இலட்சக்கணக்கான லண்டன் மக்கள் மிகப்பெரிய கவுன்சில் வரி உயர்வுகளை எதிர்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மிகவும் பின்தங்கிய பகுதிகளுக்கு நிதியை மாற்றிய பின்னர் முன்னணி நகரங்கள் வரி உயர்வை சந்திக்கும் எனத் தெரிவிக்கப்ப்டுள்ளது.

நிதி ஆய்வுகள் நிறுவனம் (IFS) சில லண்டன் பெருநகரங்களில் கவுன்சில் வரி 75% வரை அதிகரிப்பை காணும் எனக் குறிப்பிட்டுள்ளது.

கென்சிங்டன் (Kensington), செல்சியா (Chelsea), வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster), வாண்ட்ஸ்வொர்த் (Wandsworth), ஹேமர்ஸ்மித்  (Hammersmith) , புல்ஹாம் (Fulham), லண்டன் நகரம் (City of London),  வின்ட்சர் (Windsor) மற்றும் மெய்டன்ஹெட் (Maidenhead) ஆகிய 06  நகரங்களிலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான கவுன்சில் வரி  மக்களின் வாக்கெடுப்பின்றி 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்த அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வீடற்றோர் அமைச்சர் அலிசன் மெக்கவர்ன் (Alison McGovern), அந்த கவுன்சில்களில் வரி செலுத்துவோர் நாட்டிலேயே மிகக் குறைந்த பில்களைக் கொண்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

அவர்கள் இந்த ஆண்டு சராசரி கவுன்சில் வரி செலுத்துபவரை விட £1,280 வரை குறைவாக செலுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!