மூன்றாம் நாடுகளில் இருந்து ஐரோப்பா செல்வோருக்கு ஏற்படும் சிக்கல்!
எல்லைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் ஐரோப்பிய நாடுகள் புதிய டிஜிட்டல் எல்லைத் (EES) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் விமான நிலையங்களில் பயணிகள் ஏறக்குறைய 03 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து வரும் பயணிகள் (மூன்றாம் நாடுகளில் இருந்து வரும் பயணிகள்) இந்த சிக்கல்களை எதிர்கொள்வார்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.
அவர்கள் கைரேகைகள் மற்றும் முக பயோமெட்ரிக்ஸ் (facial biometrics) பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என சர்வதேச விமான நிலைய கவுன்சில் (ACI) தெரிவித்துள்ளது.
ஜனவரி 2026 இற்குள் டிஜிட்டல் பதிவு வரம்பை 10 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 2026 க்குள் முடிக்கப்பட உள்ள EES வெளியீட்டு அட்டவணையை அவசரமாக மதிப்பாய்வு செய்து கட்டுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச விமான நிலைய கவுன்சில் (ACI) அறிவுறுத்தியுள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் தற்போது மோசமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





