அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா மச்சாடோவுக்கு முதுகெலும்பு முறிவு
வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவரும், இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado), கடந்த வாரம் வெனிசுலாவில் இருந்து நார்வேக்கு(Norway) ரகசியமாகப் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கி முதுகெலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு நிகழ்வில் பங்கேற்க ஒரு சிறிய மீன்பிடி படகில் அதிக ஆபத்துள்ள கடலை கடக்கும் போது காயம் ஏற்பட்டதாக நோர்வே நாளிதழான ஆப்டன்போஸ்டன்(Aftenposten) தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து, உல்லெவலில்(Ullevaal) உள்ள ஒஸ்லோ(Oslo) பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவர்கள் மச்சாடோவை பரிசோதித்ததாக ஆப்டன்போஸ்டன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒஸ்லோவில் நோபல் பரிசைப் பெறுவதற்காக ஆபத்தான பயணத்தின் போது தனது உயிருக்கு பயந்ததாக மச்சாடோ முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த வாரம் மரியா கொரினா மச்சாடோவிற்கு பரிந்துரைக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை அவரது மகள் பெற்றுக்கொண்டார்.
ஆகவே, காயம் காரணமாகவே இந்த நிகழ்வில் மரியா கொரினா மச்சாடோ பங்கேற்கவில்லை என்று நம்பப்படுகிறது.





