கொலை குற்றச்சாட்டில் ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னரின் மகன் கைது
திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான ராப் ரெய்னரும்(Rob Reiner) அவரது மனைவி மைக்கேல் சிங்கர் ரெய்னரும்(Michelle Singer Reiner) ஞாயிற்றுக்கிழமை பிரெண்ட்வுடில்(Brentwood) உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் ராப் ரெய்னரின் மகன் நிக் ரெய்னர்(Nick Reiner) கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான நிக் ரெய்னர் கைது செய்யப்பட்டு 4 மில்லியன் டாலர் ஜாமீனில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் கோனன் ஓ’பிரையனின்(Conan O’Brien) வீட்டில் நடந்த ஒரு விருந்தில் ராப் மற்றும் நிக் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், விருந்தில் நிக் விசித்திரமாக நடந்துகொள்வதை பலர் கவனித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மரணங்களை ஒரு வெளிப்படையான கொலையாக விசாரித்து வருவதாகவும் குற்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ரெய்னரின் மகன் என்ன குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





