கப்பல் டேங்கர் வெடிப்பு : சிறிது நேரம் தடைப்பட்ட சூயஸ் கால்வாயின் போக்குவரத்து!‘
எகிப்தின் சூயஸ் கால்வாயின் ஒற்றைப் பாதையில் கச்சா எண்ணெயுடன் பயணித்த கப்பலின் டேங்கர் வெடித்ததில் போக்குவரத்து தடை பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கால்வாயின் 12 கிலோமீட்டர் (7.5 மைல்) தூரத்தில் மால்டா கொடியுடன் கூடிய சீவிகோர் கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் சஃப்வத் தெரிவித்தார்.
இதன்காரணமாக கால்வாயூடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டதுடன், அதன் பின்னால் வந்த 8 கப்பல்களின் பயணமும் தடைபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, மூன்று இழுவைப் படகுகள் டேங்கரை 17 கிலோமீட்டர் (10.5 மைல்) தூரத்தில் இரட்டைப் பாதை பகுதிக்கு இழுத்துச் சென்ற பிறகு, கால்வாயில் வழிசெலுத்தல் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக அதிகாரிகள் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளனர்.