‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – 2’ புதிய அப்டேட்
நடிகர் விஜய் சேதுபதிக்கு பெயர் வாங்கி கொடுத்த படங்களில் நிச்சயம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இருக்கும்.
2013ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்த “சுமார் மூஞ்சி குமார்” என்ற கதாபாத்திரம் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றது.
குறிப்பாக “குமுதா… ஹேப்பி அண்ணாச்சி” என்ற வசனம் படம் வந்த காலக்கட்டத்தில கொடிகட்டிப்பறந்த டயலொக் ஆகும்.
இந்தப் படத்துக்கு இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்பும் மக்கள் காட்டும் அன்பே, ‘பாலகுமாரா 2’ என்ற யோசனையை உருவாக்க வைத்திருக்கிறது.
இந்த நிலையில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2′ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
ஆனால் இரண்டாவது பாகத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளது விஜய் சேதுபதி இல்லையாம். இந்த முறை புதிய கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்போவதாகவும், அப்படத்தில் முன்னணி வேடத்தில் சாண்டி மாஸ்டர் நடிக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.
இன்னும் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. ஆனால் எதுவாக இருந்தாலும் படத்தை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.






