சீன மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம்! அடுத்த வாரம் அதிகரிக்கும் அபாயம்
சீனாவில் மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம் அடுத்துவரும் சில வாரங்களுக்குக் கடுமையாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2 மாதங்களாகச் சீனாவில் மக்கள் வரலாறு காணாத வெப்பத்தை அனுபவித்துவருகின்றனர்.
வீடுகளில் வெப்பத்தைச் சமாளிக்க மக்கள் குளிர்சாதன இயந்திரங்களை அதிகமாகப் பயன்படுத்திவருகின்றனர். இதனால் சீனாவின் தெற்கில் மின்சார விநியோகம் அதிகரித்து மின்கம்பங்களில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
வணிகத் தளங்களிலும் குளிர்சாதன இயந்திரங்கள் வழக்கத்துக்கு மாறாக நீண்டநேரம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அவற்றுக்கான மின்சாரத் தேவையும் வெகுவாக அதிகரித்துள்ளது.
அடுத்துவரும் சில நாள்களில் வெப்பத்தின் அளவு 35 பாகை செல்ஸியஸைத் தொடும் என்று வானிலை ஆய்வகம் கணித்துள்ளது.
சில இடங்களில் மெர்க்குரியின் அளவு 40 பாகை க்கும் மேல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சீனாவின் தென்பகுதியில் மின்சார உற்பத்தி வரலாற்று உச்சத்தை நெருங்கியிருக்கிறது.