இலங்கை

இலங்கையில் சகல துறைகளையும் டிஜிட்டல் மயமாக்க தயாராகும் அரசாங்கம்!

இலங்கையில் சகல துறைகளையும் டிஜிட்டல் மயமாக்குவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தி இருப்பதாகப் பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வேலை தேடுபவர்களுக்குப் பதிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆட்களை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி கொழும்பில் உள்ள மண்டபக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவும் உரையாற்றினார்.

இலங்கை மக்கள் உலகத்துடன் இணைந்து செல்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றிய அறிவு முக்கியமானது என அமைச்சர் கூறினார்.

சமூக ஊடகங்கள் வாயிலாக சமூகமயப்படுத்தப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை அறிந்து வைத்திருப்பது முக்கியமானது என பிரதியமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரட்ன குறிப்பிட்டார்.

(Visited 7 times, 7 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!