கனடாவில் இந்திய மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் இடையே சந்திப்பு
கனடாவில் நடைபெற்ற ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்(Jaishankar) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன்(Marco Rubio) இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது தேசிய தலைநகரில் நடந்த செங்கோட்டை(Red Fort) கார் குண்டுவெடிப்புக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “இன்று ஜி7 கூட்டத்தில் மார்கோ ரூபியோவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. டெல்லியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு அவர் அளித்த இரங்கலைப் பாராட்டுகிறேன். வர்த்தகம் மற்றும் விநியோகங்களில் கவனம் செலுத்தி, நமது இருதரப்பு உறவுகளைப் பற்றி விவாதித்தோம். உக்ரைன் மோதல், மத்திய கிழக்கு/மேற்கு ஆசிய நிலைமை மற்றும் இந்தோ-பசிபிக் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் Xல் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமெரிக்கா மிக அருகில் இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) கூறிய சில நாட்களுக்குப் பிறகு, ரூபியோவுடனான ஜெய்சங்கரின் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.





