பயங்கரவாதத்தால் மீள் தன்மை கொண்ட நாடுகளின் மனப்பான்மையை உடைக்க முடியாது!
டெல்லியின் சின்னமான செங்கோட்டை அருகே நடந்த துயர குண்டுவெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் நகரங்களை குறிவைத்தாலும், அது மீள்தன்மை கொண்ட நாடுகளின் மனப்பான்மையை ஒருபோதும் உடைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த நேரத்தில் இஸ்ரேல் துக்கத்திலும் வலிமையிலும் உங்களுடன் உறுதியாக நிற்கிறது,” என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன் இந்தியாவும், இஸ்ரேலும் பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் விட்டுக்கொடுக்காத மனப்பான்மையால் ஒன்றுபட்ட பண்டைய நாகரிகங்களை கொண்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதம் நமது நகரங்களைத் தாக்கக்கூடும், ஆனால் அது நம் ஆன்மாக்களை ஒருபோதும் அசைக்காது. நமது நாடுகளின் ஒளி நமது எதிரிகளின் இருளை மறைக்கும்,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





