தைவானுக்கு புயல் எச்சரிக்கை – 8300 மக்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றம்!
தைவானில் புயல் எச்சரிக்கைகள் அமுலில் உள்ள நிலையில் கடலோர பகுதிகளில் வசிக்கும் 8,300 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸைத் தாக்கிய ஃபங்-வோங் (Fung-wong) சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த புயலானது தைவானை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் தைவானை நெருங்கும்போது மணிக்கு 65 கிமீ (40 மைல்) வேகத்தில் காற்று வீசும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தைவானிய அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
(Visited 6 times, 6 visits today)





