இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவிற்கு இடையே கையெழுத்தாகும் பாதுகாப்பு ஒப்பந்தம்!
இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகவுள்ளதாக ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியத் தலைவர் தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக ஆஸ்திரேலியா செல்லவுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்ததாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் ஜனவரியில் இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்த ஆஸ்திரேலிய ஜனாதிபதி அந்தோணி அல்பானீஸும் (Anthony Albanese) இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என அறிவித்திருந்தார்.
இதற்கமைய இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அந்த அச்சுறுத்தல்களைச் சமாளிக்க தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதை ஆலோசிக்கவும் பரிசீலிக்கவும் வாய்ப்பை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 9 times, 10 visits today)





