ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளான துருக்கி விமானம் – 20 பேர் பலி
அசர்பைஜானில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த துருக்கி விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானத்திலிருந்த 20 பேரும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியின் C-130 ரக இராணுவச் சரக்கு விமானம் ஒன்றே இதன் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானம் துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(Visited 2 times, 2 visits today)





