பிரித்தானியாவில் கடந்த 06 மாதங்களில் 91 கைதிகள் தவறுதலாக விடுதலை!
பிரித்தானியாவில் ஏப்ரல் மாத தொடக்கத்திற்கும் அக்டோபர் மாத இறுதிக்கும் இடையில் மொத்தம் 91 கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்டதாக நீதி அமைச்சகத்தின் (MoJ) சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மைக்காலமாக மோசமான குற்றவாளிகள் பலர் தவறுதலாக விடுதலை செய்யப்படுகின்ற விடயம் நடப்பு அரசாங்கத்திற்கு அவப்பெயரை கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில் இந்த புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. நீதித்துறை செயலாளர் டேவிட் லாமி (David Lammy) சிறைச்சாலைகளில் இருக்கும் நெருக்கடிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மார்ச் 2024 மற்றும் மார்ச் 2025 க்கு இடையில் 262 பேர் இவ்வாறு தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது முந்தைய 12 மாதங்களுடன் ஒப்பிடும்போது 128 சதவீத அதிகரிப்பாகும்.
இதற்கிடையில் இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பலர் தலைமறைவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




