உள்நாட்டுப் பிரச்சினைகளைத் திசை திருப்பும் பாகிஸ்தான் – தாலிபான்கள் விரக்தி
இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையின் சமீபத்திய சுற்று உடன்பாடு இல்லாமல் முடிவடைந்தது.ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் ஆட்சி, பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும், தாலிபான் அரசாங்கம் துருக்கி குடியரசு மற்றும் கத்தார் அரசுக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, மத்தியஸ்தம் செய்தமைக்காக நன்றி தெரிவித்துள்ளது.
தாலிபான்கள் தங்கள் பிரதேசத்தை வேறொரு நாட்டிற்கு எதிராகவோ அல்லது எந்தவொரு நாடும் அதன் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை மீறுவதற்குப் பயன்படுத்த அனுமதிக்காது எனவும், பாகிஸ்தானின் நிலைப்பாட்டையும் விமர்சித்தனர்.
ஆப்கானிஸ்தான் மக்களையும் பிரதேசத்தையும் பாதுகாப்பது ஒரு தேசிய கடமையாகவே உள்ளது எனக் கூறிய தாலிபான்கள், அல்லாஹ்வின் உதவியுடனும் அதன் மக்களின் ஆதரவுடனும் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக உறுதியான தற்காப்பு நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.
உள் பாதுகாப்புக் பிரச்சினைகளை வெளிப்புறமாக்க பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் முயற்சிப்பதாலும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு உறுதியளிக்க விரும்பாததாலும் ஆப்கானிஸ்தானின் விரக்தியை இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது.





