ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தையில் பின்னடைவு!
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இடம்பெற்று வரும் எல்லை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைதி பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி பேச்சுவார்த்தை இஸ்தான்புல் நகரில் இடம்பெற்றது. பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கமும் இன்றி நிறைவு பெற்றமைக்கு இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துகின்றன.
இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் (Zabiullah Mujahid) பேச்சுவார்த்தை தோல்விக்கு பாகிஸ்தானைக் குற்றம் சாட்டினார்.
“பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானின் கோரிக்கைகள் நியாயமற்றவை எனவும், பேச்சுவார்த்தைகள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
போரில் ஈடுபடுவது எங்கள் முதல் தேர்வு அல்ல. ஆனால் போர் வெடித்தால் நம்மைத் தற்காத்துக் கொள்ள எங்களுக்கு உரிமை உண்டு” எனக் கூறியுள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் பிரிதிநிதிகள், எதிர்கால சந்திப்புகளுக்கு எந்த திட்டமும் இல்லாமல் வீடு திரும்புவதாக தெரிவித்துள்ளனர்.





