துருக்கியில் வாசனை திரவியக் கிடங்கில் பாரிய தீவிபத்து – 06 பேர் பலி!
துருக்கியின் வடமேற்கில் உள்ள ஒரு வாசனை திரவியக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திலோவாசியில் (Dilovasi) இன்று இந்த விபத்து நிகழ்ந்ததாக கோகேலி (Kocaeli) மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த தீவிபத்தில் 05 பேர் படுகாயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)





