ஐரோப்பா செய்தி

UKவில் புகலிட அந்தஸ்த்து பெற்றிருந்தாலும், இனி நிரந்தரமாக தங்க முடியாது?

பிரித்தானியாவில் இந்த மாத இறுதியில் குடியேற்றம் மற்றும் புகலிட முறைமையில் மிகப் பெரிய மாற்றத்தை உள்துறை செயலாளர் அறிவிக்கவுள்ளதாக  பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) டென்மார்க்கின் குடியேற்ற கொள்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் அதனை ஒத்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அதாவது  பெரும்பாலான புகலிட அந்தஸ்த்து பெற்றவர்களை  நாட்டில் தற்காலிகமாக தங்கவைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் குடும்ப மறு ஒருங்கிணைப்பை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் நாட்டில் தங்கியிருப்பவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின் வெளியேற்ற முடியும் என்பதுடன், மக்களை ஈர்க்கும் சலுகைகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் ஷபானா மஹ்மூத்தின் (Shabana Mahmood) இந்த யோசனைகளுக்கு தொழிற்கட்சியில் இருந்தே எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற   தொழிற்கட்சி மாநாட்டில், பிரித்தானியாவின் எல்லைகளை மீண்டும் கட்டுப்படுத்த “எதை வேண்டுமானாலும் செய்வேன்” என்று மஹ்மூத் உறுதியளித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை டென்மார்க் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு புகலிடக் கோரிக்கையாளர்களை குறைத்துள்ளது.

இதற்கு டென்மார்க் கடைப்பிடிக்கும் கொள்கைகள் வருமாறு, 

உள்நாட்டு மோதல்கள் காரணமாக டென்மார்கிற்கு புலம்பெயர்ந்துள்ள மக்கள் பலருக்கு புகலிட அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தாலும் அவர்கள், அங்கு தற்காலிகமாக தங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

உள்நாட்டு போர், அல்லது கலவரங்கள் நிறைவுற்று தங்கள் நாடு பாதுகாப்பானது என குறித்த நாடுகள் அறிவிக்கும் பட்சத்தில் டென்மார்கில் தற்காலிகமாக தங்க அனுமதிக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும். 

அதேபோல் நீண்டகாலமாக டென்மார்கில் தங்கியிருப்பவர்கள் முழுநேர வேலையில் சேர்வதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. 

நீங்கள் டென்மார்க்கில் வதிவிட உரிமைகள் வழங்கப்பட்ட அகதியாக இருந்தால் உங்கள் துணையை அழைத்துவர 24 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டும். 

டென்மார்க்கில் உள்ள துணைவர் மூன்று ஆண்டுகளுக்கு சலுகைகளைப் பெற்றிருக்கக்கூடாது, மேலும் நிதி உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும். அத்துடன்  இருவரும் டேனிஷ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

இவ்வாறாக பல கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 3 times, 4 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!