அமெரிக்காவின் விமானப்படை தளத்திற்கு அனுப்பப்பட்ட மர்ம பொட்டலம்! பலர் வைத்தியசாலையில்!
அமெரிக்காவின் விமானப்படை தளத்திற்கு சந்தேகத்திற்கிடமான பொட்டலம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனை திறந்து பார்த்த சில ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொட்டலத்தில் அடையாளம் தெரியாத வெள்ளைப் நிற பொடி இருந்ததாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் விமானம், மற்றும் அதன் துணைக் கப்பல்கள் விமான தளத்தில் உள்ளன. மேலும் ஜனாதிபதி வழக்கமாக பயணங்களுக்கு புறப்படும் இடமும் இதுதான் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவித்த அதிகாரிகள், தற்போது வழக்கமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.





