கிரேக்கத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்றை சுற்றிவளைத்த கடற்கொள்ளையர்கள்!
கிரேக்கத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் இன்று தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சோமாலியா கடற்கரையில் லாட்ஸ்கோ மரைன் மேனேஜ்மென்ட் (Latsco Marine Management) நிறுவனத்திற்கு சொந்தமான ஹெல்லாஸ் அப்ரோடைட் (Hellas Aphrodite) என்ற கப்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
படகொன்றில் வந்த கடற்கொள்ளையர்கள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதுடன், துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கப்பலில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பகுதியில் பயணிக்கும் பிற கப்பல்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகளை அனுப்ப ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
(Visited 3 times, 3 visits today)





