உலகம் செய்தி

அமெரிக்க விமான விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அமெரிக்காவின் கென்டக்கியில் (Kentucky)  சரக்கு விமானம்  விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Louisville Muhammad Ali International Airport ) புறப்பட்ட சரக்கு விமானமானது புறப்பட்ட  சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் விமானத்தின் பணியாளர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி மேலும் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

விபத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில் முதற்கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

(Visited 5 times, 5 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!