அணுவாயுத சோதனை – ட்ரம்பின் குற்றச்சாட்டை மறுக்கும் பாகிஸ்தான்!
வடகொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இரகசியமாக அணுவாயுத சோதனை செய்வதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்து நிலையில், அந்த கூற்றை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பில் சி.பி.எஸ் ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட பாகிஸ்தானின் மூத்த அதிகாரி, தனது நாடு “அணு ஆயுத சோதனைகளை நடத்திய முதல் நாடு அல்ல, மீண்டும் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் திட்டமும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடனான போர் நிறுத்தத்தை தொடர்ந்து அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ட்ரம்பின் குற்றச்சாட்டுகள் பாகிஸ்தான் – அமெரிக்கா இடையிலான உறவுகள் மோசமடைய வழிவகுக்கலாம்.
இதேவேளை பாகிஸ்தான் இறுதியாக கடந்த 1998 இல் அணுவாயுத சோதனையை நடத்தியது. அதன் பின்னர் அது “அணுசக்தி சோதனைக்கு ஒருதலைப்பட்ச தடையை” பராமரித்து வருவதாகவும் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் பாகிஸ்தான் விரிவான சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.





