பாதுகாப்பு செலவீனங்களை மும்மடங்காக அதிகரிக்கும் தென்கொரியா!
தென்கொரியாவில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கான நிதியை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி லீ ஜே மியுங் ( Lee Jae Myung) தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பாதுகாப்பு செலவினங்களில் திட்டமிடப்பட்ட 8.2% அதிகரிப்புக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையை இன்று ஆற்றிய அவர் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிப்பது இராணுவத்தின் ஆயுத அமைப்புகளை நவீனமயமாக்கவும் அமெரிக்காவை நம்பியிருப்பதைக் குறைக்கவும் உதவும் என்று அவர் கூறினார்.
728 டிரில்லியன் வோன் ($506 பில்லியன்) முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு செலவீனங்களுக்காக 66.3 டிரில்லியன் வோன் ($46 பில்லியன்) முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





