இந்தியா செய்தி

ஜெய்ப்பூரில் வேகமாக வந்த லாரி மோதி 14 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூரில்(Jaipur) வேகமாக வந்த டிப்பர் லாரி பல வாகனங்கள் மீது மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

ஜெய்ப்பூரில் உள்ள லோஹா மண்டி(Loha Mandi) பகுதியில் டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலர் சிகிச்சைக்காக உள்ளூர் கன்வாடியா(Kanwatia) மருத்துவமனைக்கும் பலத்த காயமடைந்தவர்கள் சவாய் மான் சிங்(Sawai Man Singh) மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சார்(Gajendra Singh Khimsar) குறிப்பிட்டுள்ளார்.

இன்று தெலுங்கானாவில்(Telangana) லாறி ஒன்று பொதுப் போக்குவரத்துப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி கிட்டத்தட்ட 16 பேர் கொல்லப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த விபத்து நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்து – 16 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!