கெஹெலியவின் சொத்து விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ரிட் மனுக்களை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக்கோரி 03 ரிட் மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் இன்று நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த மனுக்களை பரிசீலனை செய்த நீதிபதி அதனை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
(Visited 5 times, 1 visits today)





