நெரிசலான இடங்களில் அவதானம் – இலங்கை மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
இலங்கையில் பொது போக்குவரத்து மற்றும் நெரிசலான இடங்களில் பயணிக்கும் போது, அவதானமாக செயற்படுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் தமது உடைமைகள் குறித்து கவனம் செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
சன நெரிசலைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் உடைமைகளை திருட முயற்சிக்கும் அபாயம் உள்ளது.
இது தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொது இடங்களில் மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறை குறித்து அறிக்கை ஒன்றையும் காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.
அத்துடன், திருட்டு அல்லது அதற்கான முயற்சி எடுக்கப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறையிடுமாறும்,
மேலும் 119 என்ற காவல்துறையின் அவசர அழைப்புடன் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 7 times, 7 visits today)





