எலான் மஸ்கின் க்ரோகிபீடியா – தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சி
பிரபலமான விக்கிப்பீடியாவிற்கு (Wikipedia) போட்டியாக க்ரோகிபீடியா (Grokipedia) என்ற புதிய AI வலைத்தளத்தை உலகின் முதல்தர கோடீஸ்வரர் வர்த்தகரான எலான் மஸ்கின் (Elon Musk) xAI நிறுவனம் உருவாக்கியுள்ளது.
உண்மையான தகவல்களை மட்டும் அடிப்படையாக் கொண்ட இணைய களஞ்சியமாக க்ரோகிபீடியா வடிவமைக்கப்பட்டுள்ளது.
விக்கிப்பீடியாவுக்கு எதிர்மறையான கொள்கைகளைக் கொண்ட வகையில் க்ரோகிபீடியா அமைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
க்ரோகிபீடியாவில் உள்ள அனைத்து கட்டுரைகளும் AI மற்றும் க்ரோக் (Grok) எனப்படும் ஒரு ஜெனரேட்டிவ் AI மூலம் திரட்டப்படுவதாக அதன் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
க்ரோகிபீடியாவின் புதிய பதிப்பு 1.0 என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது தற்போதைய பதிப்பை விட 10 மடங்கு சிறந்தது என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரையில் சுமார் 885,000 கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, விக்கிப்பீடியாவின் பலம் அதன் நியாயமான கொள்கைகள் மற்றும் தன்னார்வ கண்காணிப்பு என்று விக்கிப்பீடியா அறக்கட்டளையின் (Wikimedia Foundation) செய்தித் தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.
AI-இயங்கும் அமைப்புகள் எப்போதும் மனித அறிவு மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை என்றும், எனவே, க்ரோகிபீடியா போன்ற புதிய திட்டங்கள் கூட விக்கிப்பீடியாவை நம்பியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தொழில்நுட்ப உலகில் க்ரோகிபீடியா புதிய புரட்சியை ஏற்படுத்தும் என பலரும் எதிர்பார்த்துள்ளனர்.





