காசா மக்களுக்கு இங்கிலாந்து வழங்கும் அரிய வாய்ப்பு!
இங்கிலாந்தில் உதவி தொகை பெற்று கல்வி கற்க செல்லும் காசா மக்கள் தற்போது தங்களது கூட்டாளிகள், குழந்தைகளை அழைத்து வர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனப் பகுதியைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வாய்ப்பை பெற்றனர்.
உள்துறை அலுவலகம் ஒப்புக்கொண்ட சிறப்பு ஏற்பாடுகளின் கீழ் அவர்கள் பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். இருப்பினும் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் உதவித்தொகையைப் பெற முடியாது என்று கூறியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து உதவி தொகை பெற்றவர்களை சார்ந்திருப்போரை ஆதரிக்கவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த திட்டங்களின் கீழ், காசா மாணவர்கள் மாணவர் சார்ந்த விசாவைப் பெற கூட்டாளர்களுக்கும் குழந்தைகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் குடியேற்றத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், இதில் லண்டனுக்கு வெளியே £6,120 பவுண்ட்ஸ், லண்டனில் £7,605 பவுண்ட்ஸ் வரை வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




