இலங்கை

இலங்கையில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்தம்

இலங்கையில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

50% குறைந்தபட்ச கையிருப்பை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையை அவதானிக்க முடிந்தது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் போதுமான அளவு எரிபொருள் உள்ளதால், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என குழப்பமடைய வேண்டாம் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று மாலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாததால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

குறைந்தபட்ச கையிருப்பை 50 வீதமாக பராமரிக்கத் தவறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரத்தை மீள்பரிசீலனை செய்து இடைநிறுத்துமாறு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!