தான்சானியா(Tanzania) தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
தான்சானியாவில்(Tanzania) தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தான்சானியாவின் மிகப்பெரிய நகரம் மற்றும் வணிகத் தலைநகரான டார் எஸ் சலாமில்(Dar es Salaam) மாலை 06:00 மணிக்கு ஊரடங்கு ஆரம்பமாகிறது என்று நாட்டின் தேசிய ஒளிபரப்பாளரான TBC தெரிவித்துள்ளது.
“இன்று காலை தொடங்கிய அமைதியின்மையைத் தொடர்ந்து, மாலை ஆறு மணி முதல் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று டார் எஸ் சலாமில்(Dar es Salaam) உள்ள பொதுமக்களை காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்” என்று காவல்துறைத் தலைவர் காமிலஸ் வம்புரா(Camillus Wambura) குறிப்பிட்டுள்ளார்.
(Visited 19 times, 1 visits today)





