கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவிய பெண் வழக்கறிஞர் ஒருவர் கைது
பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மறைத்து வைக்க இஷார செவ்வந்திக்கு தண்டனைச் சட்ட புத்தகத்தின் நகலை வழங்கியதாகக் கூறப்படும் கடவத்தை(Kadawatha) பகுதியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 19 அன்று அளுத்கடே நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வேடமணிந்த ஒருவரால் “கணேமுல்ல சஞ்சீவ” என்று அழைக்கப்படும் பிரபல கும்பல் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இஷார செவ்வந்தி உட்பட 6 பேர் அக்டோபர் 14ம் திகதி நேபாளத்தில்(Nepal) கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனை தொடர்ந்து இஷாரா செவ்வந்தி உட்பட சந்தேக நபர்களிடம் மூன்று காவல்துறை குழுக்கள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெண் வழக்கறிஞர் குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.





