லசந்த விக்ரமசேகர கொலை விவகாரம் – பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை!
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரை கைது செய்ய இலங்கை காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஒன்று, 1.2 மில்லியன் ரூபாய் ரொக்கம், ஹெராயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (“ஐஸ்”) மற்றும் போதைப்பொருள் நுகர்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இதன்போது காவல்துறையினருடனான மோதல் அங்கிருந்து தப்பி ஓடிய ஹக்மன பரணலியனகே நுவான் தாரகா ( Hakmana Paranaliyanage Nuwan Tharaka) என்ற சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 859 8888 என்ற தொலைபேசி எண் அல்லது நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இலக்கமான 011 233 7162 / 071 859 2087 ஆகிய எண்களுக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





