வெளிநாட்டிலிருந்து இலங்கை சென்றவர் நாடுகடத்தல்
போலியான பிரேசிலிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
அவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-218 மூலம் கட்டார் நாட்டின் தோஹாவிலிருந்து வந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது விமானப் பயண ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு கவுண்டரில் தனது பிரேசிலிய கடவுச்சீட்டை அவர் சமர்ப்பித்திருந்தார்.
இதன் போது பிரேசிலிய கடவுச்சீட்டு போலியானது என்பது தெரியவந்தது.
அதற்கமைய, அவரை உடனடியாக நாடுகடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
(Visited 6 times, 6 visits today)





