Women’s WC – வங்கதேசத்திற்கு எதிராக வெற்றியை பதிவு செய்த தென் ஆப்பிரிக்கா
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 14வது போட்டியில் வங்காளதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய வங்காளதேசம் 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 232 ஓட்டங்களை பெற்றது. அணி சார்பில் ஷர்மின் அக்தர் (Sharmin Akhter) மற்றும் ஷோர்னா அக்தர் (Shorna Akter) அரை சதம் அடித்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா 49.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
ஆரம்பத்தில் குறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்களை இழந்தாலும் இறுதியில் வீரர்கள் கூட்டு முயற்சியில் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
புள்ளி பட்டியலின் படி, தென் ஆப்பிரிக்கா 4 போட்டிகளில் 3 போட்டிகளை வென்று மூன்றாம் இடத்திலும் வங்காளதேசம் 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்று ஆறாவது இடத்திலும் உள்ளனர்.





