கனடாவில் அஞ்சல் திருட்டு வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 ஆண்கள் கைது
கிரெடிட் கார்டுகள் மற்றும் காசோலைகள் உட்பட அஞ்சல் திருட்டு தொடர்பாக எட்டு இந்திய வம்சாவளி ஆண்களை கனேடிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பீல் (Peel), ஹாமில்டன் (Hamilton) காவல்துறை மற்றும் கனடா போஸ்ட் (Canada Post) இணைந்து நடத்திய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரிடமிருந்து $400,000 மதிப்புள்ள 255 காசோலைகள், 182 கிரெடிட் கார்டுகள், 35 அரசாங்க அடையாள அட்டைகள் மற்றும் 20 பரிசு அட்டைகள் உட்பட மொத்தம் 465 திருடப்பட்ட அஞ்சல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுமன்பிரீத் சிங், குர்தீப் சட்டா, ஜஷன்தீப் ஜட்டானா, ஹர்மன் சிங், ஜசன்பிரீத் சிங், மன்ரூப் சிங், ராஜ்பீர் சிங் மற்றும் உபிந்தர்ஜித் சிங் என சந்தேக நபர்களை கவத்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
21 முதல் 29 வயதுக்குட்பட்ட எட்டு சந்தேக நபர்கள், பல திருட்டு மற்றும் குற்றத்தால் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருத்தல் உட்பட 344 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
தெற்காசிய புலம்பெயர்ந்தோர் அதிகம் வசிக்கும் பகுதிகளான மிசிசாகா (Mississauga) மற்றும் பிராம்ப்டனில் (Brampton) உள்ள குடியிருப்பு அஞ்சல் பெட்டிகளில் இருந்து அஞ்சல் காணாமல் போனதாக வந்த புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை ஏப்ரல் 2025ல் தொடங்கப்பட்டது.





