ராஞ்சியில் 9 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி – 5 பேர் கைது
ஜார்கண்ட் மாவட்டம் ராஞ்சியின் ரது பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் ஒன்பது பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஐந்து பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் கண்காணிப்பாளர் பிரவீன் புஷ்கர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மற்ற நான்கு குற்றவாளிகளையும் பிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருவதாக புஷ்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது “போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று ரது காவல் நிலைய பொறுப்பாளர் ராம்நாராயண் சிங் தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)





