அறிவியல் & தொழில்நுட்பம்

மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு – கணினி பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

மைக்ரோசாப்ட்  (Microsoft) நிறுவனம் தனது விண்டோஸ் 10 (Windows 10) இயக்க முறைமைக்கான பாதுகாப்பு புதுப்பிப்புகளை நாளை (14) முதல் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.

எனவே, விண்டோஸ் 10 (Windows 10) கணினிகளின் பாதுகாப்பு நாளை முதல் ஆபத்தில் சிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 11 (Windows 11) கணினிகளை இலவசமாகப் புதுப்பிக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது.

இதற்கிடையில், உலகில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான சாதனங்கள் விண்டோஸைப் (Windows) பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 43% பேர் ஏற்கனவே விண்டோஸ் 10 (Windows 10) ஐப் பயன்படுத்துகிறார்கள்.

இதேவேளை நீங்கள் 2026 ஆம் ஆண்டுவரை விண்டோஸ் 10 ஐ தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் பாதுகாப்பு புதுப்பிப்புகளை வழங்கும் ஒரு வருட ESU நிரலுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!