மகளிர் உலகக் கோப்பை! பிறந்தநாளில் சாதனை படைத்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் அன்னாபெல் சதர்லேண்ட் தனது 24வது பிறந்தநாளில் மிகவும் அரிய சாதனையை படைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 40 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்படி, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது பிறந்தநாளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்பு ஒரு முறை மட்டுமே இந்த தனித்துவமான சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சாதனையை ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான், 2024 ஆம் ஆண்டு தனது 26வது பிறந்தநாளில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நிகழ்த்தினார்.
விளையாட்டு வர்ணனையாளர்கள் அன்னாபெல் சதர்லேண்ட் தனது பிறந்தநாளில் தனது நாட்டிற்காக சிறப்பாக செயல்பட்டது அதிர்ஷ்டம் என்று புகழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





