இலங்கையின் அலரி, ஜனாதிபதி மாளிகைகளில் இருந்த பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டதா?
இலங்கையின் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து பல மதிப்புமிக்க பொருட்கள் களவாடப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
குறித்த பொருட்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
விழாவொன்றில் உரையாற்றிய அவர், இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான எந்த தனிப்பட்ட உடைமைகளும் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து தொடர்புடைய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அந்த வீடுகளில் இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.





