ஜனாதிபதியின் செயலாளர் வீட்டிற்குள் நுழைய முயன்ற நபர் கைது
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வீட்டிற்குள் நுழைய முயன்ற நபரை பின்வத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாணந்துறை பின்வத்தையில் உள்ள ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் சந்தேகநபர் நுழைய முயன்றுள்ளார்.
அந்த நபர் இன்று (30) மதியம் 12.30 மணியளவில் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார்.
சந்தேக நபர் சுவரில் இருந்து குதித்து தோட்டத்திற்குள் நுழைந்த விதத்தை வீட்டின் பாதுகாப்பிற்காக காத்திருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பார்த்துள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரைப் பிடிக்கச் சென்றபோது, அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர், பின்வத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசியில் சம்பவம் தொடர்பில் தெரிவித்தார்.
இதன்படி, பின்வத்த காவற்துறையின் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் குழுக்கள் மற்றும் 06 மோட்டார் சைக்கிள்கள் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
அதன்படி பின்வத்த பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய வீடொன்றில் பதுங்கியிருந்த சந்தேக நபரை பொலிஸாரால் கைது செய்ய முடிந்தது.
சந்தேகநபர் காலி பத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையானவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தற்போது பின்வத்தை பொலிஸாரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் நாளை (31) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.