பிரித்தானியா : மென்செஸ்டரில் ஜெப ஆலயத்திற்கு அருகில் ஏற்பட்ட பதற்ற நிலை – நால்வர் படுகாயம்!
பிரித்தானியாவின் மென்செஸ்டரில் உள்ள ஜெப ஆலயம் ஒன்றில் பொதுமக்களை நோக்கி பயணித்த காரினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் கத்தி குத்து சம்பவம் ஒன்றும் பதிவாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (02.10) காலை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அவசர அழைப்பை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார், மற்றும் துணை மருத்துவர்கள் காயமடைந்த நான்கு பேரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
அத்துடன் குற்றவாளி என அறியப்படும் நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கார் மக்களை நோக்கி சென்றதற்கான காரணமும், தாக்குதல்தாரி கத்தி குத்து தாக்குதலை ஏன் மேற்கொண்டார் என்பதற்கான காரணத்தையும் பொலிஸார் வெளியிடவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





