7 போர்களை நிறுத்திவிட்டேன் – நோபல் பரிசு வேண்டும் என புலம்பும் ட்ரம்ப்
7 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானமாகிவிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் இடையே நடைபெற்ற 7 போர்களை நிறுத்தி விட்டதாக கூறிவரும் ட்ரம்ப், ரஷ்யா, உக்ரைன் போரையும் எப்படியும் நிறுத்திவிடுவேன் என தெரிவித்துள்ளார்.
“உலக நாடுகள் இடையே அமைதியை நிலைநாட்டியதற்கு தனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என ட்ரம்ப் பிடிவாதமாக உள்ளார். ஆனாலும் நோபல் பரிசு உண்டா இல்லையா என்பது பற்றிய எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், நான் இஸ்ரேல்-காசா போரை நிறுத்திவிட்டேன்,நாங்கள் அதை சரி செய்துவிட்டோம். ஹமாஸ் அதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
அப்படி ஏற்காவிட்டால் அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். எனவே எனக்கு நோபல் பரிசு தரவேண்டும். நோபல் பரிசு தரவில்லை என்றால் அது அமெரிக்காவுக்கு அவமானம் ஆகிவிடும்” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.





