நொய்டாவில் 21வது மாடியில் இருந்து குதித்து பயிற்சி மருத்துவர் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கட்டிடத்தின் 21வது மாடியில் இருந்து குதித்து பயிற்சி மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதுராவைச் சேர்ந்த 29 வயதான சிவா, தனது பெற்றோருடன் சகோதரியின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு அவர் 21வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2015ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த சிவா, 2020ல் கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் மனநலப் பிரச்சினைகள் ஏற்பட்டதால் தனது மருத்துவப் பயிற்சியை இடைநிறுத்த வேண்டியிருந்தது. இது அவருக்கு பெரும் மன உளைச்சலையும் மனச்சோர்வையும் ஏற்படுத்தியது.
இதனால் குறித்த இளைஞன் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.





