வளர்ச்சிக்கு பயங்கரவாதம் தடையாக உள்ளதென கூறும் இந்தியா
பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒற்றுமையின் அவசியத்தை இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வலியுறுத்தியுள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஐக்கிய நாடுகள் சபை உட்பட பலதரப்பு நிறுவனங்களின் அவசர சீர்திருத்தங்களும் தேவை என்றும் அவர் கூறினார்.
பன்முக வடிவங்களில் பயங்கரவாதம் வளர்ச்சிக்கு ஒரு நிலையான அச்சுறுத்தலாகவும் அமைதியை சீர்குலைப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
உலகம் பயங்கரவாத நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ளவோ அல்லது மன்னிக்கவோ கூடாது என்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பயங்கரவாதிகளுக்கு பரந்த வலையமைப்பு இருப்பதால், எந்த முனையிலும் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் உண்மையில் சர்வதேச சமூகத்திற்கு ஒரு சிறந்த சேவையைச் செய்வார்கள் என்று பாகிஸ்தானை பெயரிடாமல் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறினார்.





