காஸாவில் முக்கிய எல்லைப் பாதையை மூடிய இஸ்ரேல் – உணவு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு
வட காஸாவின் ஸிக்கிம் எல்லைப் பகுதிப் பாதையை இஸ்ரேல் மூடி வைத்துள்ளதால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இது வட காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லும் முக்கியமான எல்லைப் பகுதியாகும்.
இம்மாதத் தொடக்கத்தில் காஸா சிட்டி மீது தரைத் தாக்குதலைத் தீவிரப்படுத்துவதற்கு முன் இஸ்ரேல் அவ்வாறு செய்தது.
வட காஸாவில் உள்ள சமூகச் சமையற் கூடங்கள், சுகாதார மருந்தகங்கள் முதலியவற்றில் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அவை மூடப்பட்டன.
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படுவோருக்கு உரிய சிகிச்சை வழங்க முடியவில்லை.
முன்னதாகத் தனது நிறுவனத்தின் கிட்டத்தப்பட்ட பாதி நிவாரணப் பொருள்கள் ஸிக்கிம் எல்லை வழியே காஸாவுக்கு அனுப்பப்பட்டதை உலக நிறுவன உணவு அமைப்பு சுட்டியது.
(Visited 29 times, 1 visits today)





