சூரியகுமாருக்கு அபராதம் விதித்த ICC – பாகிஸ்தான் வீரர்களுக்கு எச்சரிக்கை
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆசிய கோப்பை போட்டிகளின் போது நடந்த விளையாட்டு ஒழுக்கமற்ற நடத்தைக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 14 அன்று அவர் தெரிவித்த கருத்துக்காக இந்திய டி20ஐ கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது போட்டிக் கட்டணத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெற்றியை இந்திய ஆயுதப் படைகளுக்கு அவர் “அர்ப்பணித்தது” ஐசிசி விதிகளை மீறுவதாகக் கருதப்பட்டது.
இருப்பினும், இந்த முடிவுக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரை சதம் அடித்த பிறகு துப்பாக்கியை போன்று காட்டி வெற்றியைக் கொண்டாடியதற்காக சாஹிப்சாதா பர்ஹானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.





